
பெலகாவி : ஆகஸ்ட். 11 – ஹிண்டலகா மத்திய சிறையில் கைதிகள் தாக்கிக்கொண்டது தொடர்பாக சிறையின் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறை ஊழியர்களான மூத்த மேற்பார்வையாளர் வி டி வாகமொரே என்பவரை சஸ்பெண்ட் செய்து சிறைச்சாலைகள் உதவி இயக்குனர் டி பி சேஷா உத்தரவு பிறப்பித்துள்ளார் . இரண்டு கைதிகளுக்கிடையே மோதல் நடக்காதவாறு பார்த்துக்கொள்வதில் ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கொலை வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ள சாய்குமாரை தண்டனை கைதி சங்கரப்பா கொராவாரா பலமாக தாக்கியுள்ளார்.
சாய்குமார் ஸ்க்ரூ ட்ரைவரால் மார்பில் ஐந்து முறை குத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் கடந்த மாதம் 29 அன்று நடந்துள்ளது. பின்னர் சாய்குமார் திருப்பி தாக்கியதில் ஷங்காரப்பவும் காயங்களடைந்திருந்தார். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . சிறையில் நடந்த இந்த தாக்குதலுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.