பெல்லந்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் 10 பேருக்கு கொரோனா


பெங்களூர், பிப்ரவரி 23: பொம்மனஹள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பெல்லந்தூரில் உள்ள அம்பலிபுரத்தில் எஸ்.ஜே.ஆர் வாட்டர்மார்க் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளில் நேற்று
, 501 பேர் பரிசோதிக்க பட்டனர்.. இன்று 405 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. இவர்களின் மருத்துவ முடிவுக்காக. காத்திருக்கிறோம் என்று மாநகராட்சி சிறப்பு ஆணையர் ரன்தீப் தெரிவித்தார்.
வாட்டர்மார்க் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 9 அடுக்குமாடி வீடுகளில் மற்றும் 4 அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.. இங்குள்ள 9 அடுக்கு மாடி வீடுகளும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் தொற்று நோய் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி சிறப்பு ஆணையர் தெரிவித்தார்.