பெல்லாரி சிறையில் கஞ்சா சிகரெட்டுகள் பறிமுதல்

ஹாசன், ஆகஸ்ட் 19- பெல்லாரி மாவட்ட சிறையில் நள்ளிரவில் போலீசார் நடத்திய சோதனையில் 17 செல்போன்கள், சார்ஜர்கள், கஞ்சா, சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எஸ்பி ஹரிராம் சங்கர், கூடுதல் எஸ்பி தம்மையா, இன்ஸ்பெக்டர் ரேவண்ணா ஆகியோர் தலைமையில் 60 பேர் கொண்ட போலீஸார், சந்தேப்பேட்டையில் உள்ள மாவட்ட சிறையில் சோதனை நடத்தினர் இன்று அதிகாலை வரை இந்த சோதனை நீடித்தது. அப்போது கைதிகள் செல்போன்கள் கஞ்சா சிகரெட்டுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. சிறையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது
மொத்தம் 6 ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் பதினொரு சாதாரண மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்போன்கள் கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவை இந்த சிறைக்குள் எப்படி வந்தது யார் கொண்டு வந்து கொடுத்தனர் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது