பெஸ்காம் அலட்சியத்தால் 6 ஆண்டுகளில் 70 பேர் பலி

பெங்களூரு, நவ. 21-
பெஸ்ட் கம் அலட்சியத்தால் கடந்த 6 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
மின் கம்பியை மிதித்து தாய், குழந்தை இறந்த விவகாரத்தில், பெஸ்காம் அதிகாரிகளின் அலட்சியம் காட்டியதாக‌ அப்பகுதியினர் கோபம் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள், உடைந்த மின்கம்பிகளையும், வளைந்துள்ள மின்கம்பங்களையும் மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சௌந்தர்யா மற்றும் அவரது 9 மாத குழந்தை இறந்த இடம் பெஸ்கோம் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது. இச்சம்பவம் தெரிய வந்ததும் அப்பகுதியினர் பெஸ்காம் அலுவலகத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.சௌந்தர்யா தனது கணவர் சந்தோஷ்குமார் மற்றும் குழந்தை சுவிக்ஷாவுடன் அதிகாலை 3.50 மணியளவில் ஹோப் பார்ம் ஜங்ஷன் ரெஸ்ட் ஸ்டாப்பில் பஸ்சில் இறங்கி, ஏ.கே.கோபால் காலனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாதையில் விளக்கு எரியாததால். இருட்டில் கணவர் சந்தோஷ்குமார் முன்னே சென்று கொண்டிருந்தார். சௌந்தர்யா குழந்தையைத் தூக்கிக் கொண்டு பின்னால் நடந்து வந்தார். இருட்டாக இருந்ததால் அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காத அவர், அதை மிதித்ததுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, அவரது ஆடைகள் தீப்பிடித்து எரிந்தன. சந்தோஷ்குமார் உதவிக்கு செல்வதற்குள் தீ மளமளவென சௌந்தர்யா, குழந்தை மீது பரவி உள்ள‌து. கதறலைக் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உதவியும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.சம்பவம் நடந்த சில நிமிடங்களில் பெஸ்காம் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெஸ்கோம் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் கோபம், அதிருப்தி தெரிவித்தனர். காலை வரை, தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் நடைபாதையில் இருந்தன. காலை 6.30 மணியளவில் காடுகோடி காவல் நிலைய‌ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெஸ்கோம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அப்பகுதி மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இறந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை அருகே உறவினர்கள் கதறி அழுதனர். பெங்களூரு மென்பொருள் நிறுவனங்களின் நகரம் என்று கூறப்படுகிறது. ஆனால், இங்கு நடைபாதையில் உள்ள மின் கம்பியை அகற்ற யாரும் நடவடக்கை எடுக்கவில்லை. இதனால் எனது மனைவியையும், குழந்தையையும் இழக்க நேரிட்ட நிலை, வேறு யாருக்கும் நேர‌க் கூடாது.

தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சௌந்தர்யாவின் கணவர் சந்தோஷ்குமார் வலியுறுத்தினார். இந்த நிலையில் பெஸ்காம் அலட்சியத்தால் கடந்த 6 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி உள்ளனர் பெங்களூரு சிட்டி பெங்களூர் ரூரல்
சிக்கபல்லாபூர் கோலார் தாவங்கரே தும்கூர்
சித்ரதுர்கா மாவட்டங்களில் மின்சார விபத்துகளில் இவர்கள் பலியாகி உள்ளனர்