பெங்களூரு: செப். 11- மல்லேஸ்வரத்தில் உள்ள லிங்க் சாலையில் இன்று காலை ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து பேக்கரி மீது மோதிய சம்பவம் நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு வந்த லாரி, லிங்க் சாலை அருகே உள்ள பேக்கரி மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, பேக்கரிக்குள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
லாரி பேக்கரி மீது மோதியதால், கதவு மற்றும் சுவர் சேதமடைந்தது.
நடைபாதையின் கான்கிரீட் இடிந்து விழுந்தது.
மல்லேஸ்வரம் போலீசார் லாரியையும் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

















