பேசிஎம் பிரசாரம் வழக்கு பதிவு செய்ய முதல்வர் அறிவுறுத்தல்

பெங்களூர்: செப்டம்பர். 21 – பேசிஎம் பிரசாரம் மாநிலம் மற்றும் தன் பெயரை கெடுக்கும் வகையில் நடந்துள்ள சூழ்ச்சி என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சியாளர்களுக்கு எதிராக புகார்கள் பதிவுசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன் என்றார். காங்கிரஸ் கட்சியினர் பேசிஎம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் இது திட்டமிட்டு கர்நாடகம் மற்றும் என் பெயரை கெடுக்க நடத்திவரும் முயற்சி. தவிர எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பொது இடங்களில் விளம்பரப்படுத்துவது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியினர் நடத்திவரும் பிரசாரங்கள் பொய் என்பது மக்களுக்கு தெரியும். இதற்கு எந்த விலையும் கிடையாது. ஆனால் மாநிலத்தின் புகழை கெடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுவது எங்கள் முயற்சி என முதல்வர் தெரிவித்துள்ளார்.