பேசிஎம் ஸ்கேன் செய்து லஞ்சம்

Lanch rate by bjp govt board is been displaying infront of kpcc office

பெங்களூர்: செப்டம்பர். 21 – பி ஜே பி அரசு 40 சதவிகித அளவிற்கு கமிஷன் அரசு என்ற பிரசாரத்தை காங்கிரஸ் துவங்கியிருப்பது அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நகரின் பல இடங்களிலும் பே சி எம் 40 சதவிகிதம் பெற்றுக்கொள்ளப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் ரேஸ் கோர்ஸ் வீதியிலுள்ள முதல்வரின் அதிகாரபூர்வ வீட்டின் சுற்றுப்புறங்களில் , ஜெயமஹால் வீதி , இண்டியன் எக்ஸ்பிரஸ் , சுற்றுப்பகுதிகள் , உட்பட பல்வேறு பகுதி சுவர்கள் , குப்பை தொட்டிகள் ஆகியவற்றின் மீது இத்தகைய போஸ்டர்களை ஒட்டப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலுள்ளது. இந்த போஸ்டர்களில் முதல்வரின் புகைப்படத்துடன் க்யூ ஆர் கோட் இருப்பதுடன் கீழே பே சி எம் -40 % இங்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. தவிர போன் எண் ஒன்றை அச்சடித்து இந்த எண்ணை ஸ்கேன் செய்து ஊழல் பணத்தை முதல்வருக்கு அனுப்பலாம் என்று ஆங்கில மொழியில் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஏற்கெனவே வெப் சைட் திறந்து உதவி எண்ணையும் துவங்கி இருப்பதுடன் பே சி எம் பிரசாரத்தை துவங்கியுள்ளது.

40 சதவிகித கமிஷன் விஷயத்தை தேர்தல் ஆயுதமாக பயன்படுத்த காங்கிரஸ் சிந்தித்து பேடிஎம் மாதிரியில் பே சிஎம் (முதல்வர் கணக்கில் செலுத்துங்கள்) போஸ்டர்களை நகரின் பெரும்பாலான இடங்களில் ஒட்டியுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் போட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரிய அளவில் சர்ச்சைகளை கிளம்பியுள்ளன. தவிர 40 சதவிகித கமிஷன் விவகாரம் இன்று சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டிருப்பதுடன் இது குறித்து காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது . கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேர நடவடிக்கைகளுக்கு பிறகு 40 சதவிகித விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அனுமதி கேட்டுள்ளது. இந்த விவகாரம் சட்டசபையில் மதியத்திற்கு பின்னர் எடுத்துக்கொள்ள உள்ள நிலையில் குழப்ப சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.