பேச்சுரிமைக்கு கட்டுப்பாடு இல்லை

புதுடெல்லி ஜனவரி 3
இந்தியாவில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் எல்லைகள் மீறப்படுவதாகவும் எனவே இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பாக எம்பி எம்எல்ஏக்கள் அரசு பிரதிநிதிகள் என்பதால் அவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வந்தது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பொது வாழ்வில் உள்ளவர்களின் பேச்சு சுதந்திரத்தின் நோக்கம் மற்றும் குடிமக்களின் அதிக நலன் மற்றும் அவர்களின் வாழ்வு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா என்பது தொடர்பான மனுக்களை விசாரித்து மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது. பொது வாழ்வில் உள்ளவர்களின் பேச்சு சுதந்திரத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு சுதந்திரத்தை மற்ற குடிமக்களுக்கு சமமான அளவில் அனுபவிக்கின்றனர் என்று இன்று கூறியது. நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, பி.ஆர்.கவை, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மற்ற குடிமக்களைப் போலவே, அரசியலமைப்பின் 19(2) பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவை தவிர, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பு அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசு பிரதிநிதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொது வாழ்வில் உள்ள மற்ற அவர்களைப் போலவே இவர்களும் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் அதற்கு எந்த கட்டுப்பாடுகளையும் தலையையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை. சமீபகாலமாக பொது மேடைகளில் மிக மோசமான கருத்துக்கள் கூட சர்வசாதாரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பும் பொழுது பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் இவ்வாறு பேசுவதாக தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேச்சு சுதந்திரத்திற்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் படி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது