பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு

மங்களூர் : நவம்பர். 9 – பிளெக்ஸ் பேனர் ஒன்றை நிறுவ முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பெல்தங்கடி பஸ் நிலையத்தின் ஸ்ரீ கோகர்நாத கூட்டுறவு வங்கி எதிரில் நடந்துள்ளது .
பெல்தங்காடியின் சஞ்சயநகரை சேர்ந்த பிரஷாந்த் (39) என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பதுடன் கொய்யூரு கிராமத்தை சேர்ந்த மலேபெட்டா கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் ஆச்சார்யா என்பவரின் மகன் சதீஷ் (25) என்பவர் இந்த விபத்தில் தீவிர காயமடைந்து அவருடைய நிலைமையும் கவலைக்கிடமாயுள்ளது . இதில் இறந்து போன பிரஷாந்த் என்பவர் சரக்கு வாகன ஓட்டுநராவார்.
பாரதீய மசதூர் சங்கம் தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டம் சார்பாக நவம்பர் 13 அன்று மங்களூரில் நடக்க உள்ள குடும்ப கூட்டு விழா நிகழ்ச்சி தொடர்பாக பெல்தங்கடி பஸ் நிலையத்தின் அருகில் தேசிய
நெடுஞசாலையில் பிரஷாந்த் மற்றும் சதீஷ் ஆகியோர் பிளெக்ஸ் பேனரை நிறுவுவதில் மும்முரமாயிருந்துள்ளனர். அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின் கம்பத்தில் உரசியபோது மின்சார ஷாக் இருவரையும் தாக்கி படு காயமடைந்துள்ளனர். . உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் பெல்தங்கடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி பிரஷாந்த் இறந்து போனதுடன் மற்றவர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.