
சென்னை: நவம்பர் 10 –
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சுமார் 6 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி ஒன்பதாம் தேதி முதலான பொங்கல் பண்டிகை பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே பெரும்பாலான ரயில்களில் ‘வெயிட்டிங் லிஸ்ட்’ காண்பிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். குறிப்பாக, பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் பெருவிழா என்பதால், ஊருக்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாட அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகிப் பண்டியையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் ரயில் முன்பதிவு இதனையடுத்து சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பொதுப் போக்குவரத்தான் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் ரயில் சேவையை அதிகமாக நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே துறையில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரணமாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யலாம். அதன்படி, ஜனவரி 9 முதல் 18 வரை நடைபெறும் பொங்கல் பண்டிகை பயணத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) முதல் காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.இதனையடுத்து பயணிகள் தங்கள் பயணத் தேதிகளை கவனமாகத் தேர்வு செய்து உடனே பதிவு செய்து கொள்ளுமாறு IRCTC தெரிவித்துள்ளது.
R

















