பொடுகு பிரச்சனை தீர எளிய ஆலோசனை

தலையில் பொடுகு மிகவும் பொதுவான பிரச்சினை. இதைத் தணிக்க ரசாயன ஷாம்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதை தவிர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை மற்றும் வெல்லப்பாகு கலந்து தலைமுடியை நன்கு துவைத்து 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் குளிக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்வது பொடுகு பிரச்சனையை குறைக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்பு குளிக்க வேண்டும் இது பொடுகு போக்க உதவுகிறது.
ஷாம்புக்கு பதிலாக பேக்கிங் சோடா பயன்படுத்தவும். குளிக்கும் முன் சோடாவை தலையில் தேய்த்து ஊற விடவும். இப்படி ரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்தாமல் பொடுகு பிரச்சனையை தீர்க்க முடியும் இது தலைமுடி ஆரோக்கியத்துக்கும் நல்லது.