பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய ஓபிஎஸ் மனு

சென்னை, மார்ச்3- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.