பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது

பெங்களூர் : நவம்பர். 27 – நடு வீதியில் தகராறுகள் செய்து பொது மக்களிடையே அச்சத்தை உண்டாக்கிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட ஆர் டி நகர் போலீசார் ரௌடி போட்க்கே இம்ரான் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர் . இந்த கலவரம் தொடர்பாக இம்ரான் , மாஜ் , மோகன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். . இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது . கொலை முயற்சி , மிரட்டல் , வழிப்பறி உட்பட பல தீவிர குற்றங்களில் ஈடுபட்டிருந்த கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சில நாட்களுக்கு முன்னர் தேவர்ஜீவனஹள்ளியில் மோதி வீதியில் உள்ள பார் ஒன்றில் நுழைந்து அரிவாள் காட்டி மிரட்டி தகராறு செய்திருந்தனர். பின்னர் பீடா கடை உரிமையாளன் ஷிவன்னா என்பவருக்கும் கத்தி காட்டி மிரட்டி 9 ஆயிரம் ருபாய் அபகரித்துக்கொண்டு தப்பியடியிருந்தனர். தவிர மோதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் , கார்கள் ஆகியவற்றை தடியால் நொறுக்கி சேதப்படுத்தியிருந்தனர் . இவர்களின் இந்த செயல் அருகில் உள்ள சி சி டி விக்களில் பதிவாகியிருந்தது . ஆர் டி நகர் , ஜெ சி நகர் ரௌடி போடதே இம்ரான் , டேங்க் முல்லா , ஹுஸேனா மசீதி , பி அண்ட் டி சர்க்கிள் , ஆகிய இடங்களிலும் இதே போல் கலவரங்கள் செய்துள்ளார் . சமீபத்திய பார் கலாட்டாவிற்கு பின்னர் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் சி சி டி வி பதிவுகளை வைத்து இவர்களை கைது செய்துள்ளனர்.