பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மோடி

புதுடெல்லி, ஜூன் 21-சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 2015ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர். பயிற்சி முடிந்ததும் விளையாட்டு வீரர்களுடனும், பொதுமக்களுடனும் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்து மகிழந்தார்.
ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.