பொது இடத்தில் மது அருந்துவதைக் கண்டித்த‌ நபர் கத்தியால் குத்தி கொலை

பெங்களூரு, ஏப். 11-
பெங்களூரு வித்யாரண்யபுராவில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியதற்காக இருவரை கண்டித்த 45 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த பவன், 24, நந்தா, 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், வெங்கடேஷ் ராமச்சந்திரபுரா விளையாட்டு மைதானத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பவனும், நந்தாவும் பீர் குடித்துக்கொண்டு நிற்பதைக் கவனித்து, பொது இடங்களில் மது அருந்த வேண்டாம் என வெங்கடேசன் கண்டித்துள்ளார்.
அவரது அறிவுரையை அவர்கள் ஏற்காததால், வெங்கடேஷ் அவர்களை தனது பெல்ட்டால் அடித்தாக கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்த பவன் மறைத்து வைத்திருந்த‌ கத்தியை எடுத்து வெங்கடேசனை குத்தி உள்ளார். அவரது வயிற்றில் குத்தியதில் படுகாயமடைந்த‌ வெங்கடேஷ், உயிரிழந்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து, பிகாம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாத பவன் மற்றும் அலுவலகம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வந்த‌ நந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலைக்கான தண்டனை), 307 (கொலை செய்ய முயற்சி), 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), மற்றும் 34 (பொது நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்பட்ட செயல்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.