பொம்மனஹள்ளியில் நிலத்தடிநீர் வற்றியது

பெங்களூர் : பிப்ரவரி . 15 – பொம்மனஹள்ளியில் குசிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை அளவு மிகவும் குறைந்த நிலையில் நிலத்தடி நீர் முழுதும் வற்றிய நிலையில் 1200 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைப்பதில்லை தேவையான அளவிற்கு காவேரி தண்ணீர் கிடைக்காததால் டேங்கர் குடிநீருக்கு தேவை அதிகரித்துள்ளது .
இந்த நிலையில் டேங்கர் தண்ணீர் விநியோகிப்பவர்கள் ஒரு லாரிக்கு 900 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்னும் சற்று பெரிய டேங்கர் குடிநீர் 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது பல இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்களும் செயல்படவில்லை. இதனால் பகுதி முழுக்க குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.பண்டெபால்யா , சிக்கபேகூறு கேட் , மைக்கோ லே அவுட் ஹொங்கசந்திரா , பிலீகஹல்லி , கோடிச்சிக்கானஹள்ளி , உட்பட பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில் செல்வந்தர்கள் பிரபலங்கள் மற்றும் அபார்ட்மெண்டுகள் உள்ள பகுதிகளில் காவேரி நீர் சரியான வகையில் விநியோகிக்கப்படுகிறது ஆனால் சாமான்ய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொம்மனஹள்ளியில் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் பாத்து நாளுக்கு ஒரு முறை அது வெறும் முக்கால் மணி நேரம்
மட்டுமே காவேரி நீர் விடபடுகிறது ஏழைகள் டேங்கர் தண்ணீர் வாங்கவும் வசதியின்றி தவித்து வருகின்றனர்