பொய் பிரசாரம் மூலம் திசை திருப்பும் பிஜேபி

பெங்களூர், மார்ச் 6-
எம்.எல்.ஏ., மடல் விருபாக்ஷப்பா ஊழலை மூடி மறைக்க பிஜேபி போய் பிரச்சாரத்தை துவக்கி இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறினார்.
2013-14 முதல் 2017-18 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காபி, சிற்றுண்டி சாப்பாடு என விருந்தோம்பலுக்கு ரூ.3 கோடியே 26 லட்சம் செலவு செய்து 200 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்ததாகவும் இது ஐபிசி பிரிவு 420 க்கு தகுதியான வழக்கு என்றும் முதல்வர் பசுவராஜ் பொம்மை கூறியிருந்தார்
இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள சித்தராமையா, ஒட்டுமொத்த பிஜேபியும் பொய்களின் தொழிற்சாலை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளனர். எங்கள் ஆட்சிக் காலத்தில் 200 கோடி ரூபாய் காபி தின்பண்டங்களுக்கு செலவிடப்பட்டதாக முதல்வர் பொய் கூறியுள்ளார்
கர்நாடக மக்களை முட்டாள்கள் என்று பிஜேபி நினைக்கிறதா அல்லது அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பது பெரிய கேள்வி. இவை எதுவுமே அவர்களிடம் இல்லாததால், அவை பொய் தொழிற்சாலை இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 40 சதவீத ஊழல், மடல் விருபாக்ஷப்பா ஊழல் போன்றவற்றால் கலங்கிய பிஜேபியினர் இதுபோன்ற பொய்களை உற்பத்தி செய்கின்றனர் என்றார்.