போக்குவரத்து காவலரின் விரல்களை கடித்த பைக் ஓட்டுனர் கைது

பெங்களூரு, பிப். 13: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதை படம் எடுக்க முயன்ற போக்குவரத்து தலைமைக் காவலரின் விரல்களைக் கடித்ததாக 28 வயது தனியார் நிறுவன ஊழியரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர், பிடிஎம் லேஅவுட் முதலாவது லேஅவுட்டைச் சேர்ந்த சையத் ஷாபி, டாக்டர் மரிகவுடா சாலையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வதைக் காலை 11.30 மணியளவில் தலைமைக் காவலர் சித்தராமேஸ்வர கவுஜலகி பார்த்து, தன்னிடமிருந்த பொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்.
“திடீரென, சையத் ஷாபி பைக்கை நிறுத்திவிட்டு, தலைமைக் காவலரிடம், நம்பர் பிளேட்டைக் கொடுக்கிறேன், தேவையான அளவு படங்களைக் கிளிக் செய்யலாம் என்று சத்தம் போட்டார்.
பின்னர் அவர், தலைமைக் காவலர் மொபைல் போனை பறித்துக்கொண்டு வேகமாக செல்ல முயன்றார். தலைமைக் காவலர் அவரை துரத்திச் சென்று நிறுத்தினார். பின்னர், சையத் ஷாபி, தலைமைக் காவலரைத் தாக்கி அவரது விரல்களைக் கடித்தார். சத்தம் கேட்டு, ஹொய்சலா வாகனம் அந்த இடத்திற்கு வந்து இளைஞரைத் தடுத்து நிறுத்தியது.இது குறித்த அவரை கைது செய்த போலீசார், பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.