
பெங்களூரு, ஆக. 23- கோரமங்களா அல்லது அதை ஒட்டிய பகுதிகளில், உங்கள் காரின் கண்ணாடியை இறக்கினால், பள்ளிச் சீருடை அணிந்து, பண உதவி கோரும் பாதாகையை வைத்திருக்கும் மாணவர்கள் இருப்பதை காணமுடியும். எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகிலுள்ள சந்தாபுராவில் உள்ள தனியார் பள்ளியின் அடையாள அட்டையை காண்பித்து உங்களை நம்ப வைப்பார்கள். சீருடை அணிந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், பெங்களூரு போலீசார், ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், பல மைனர் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சோகமான கதைகளை கூறி பணம் வசூலிப்பதாகக் கூறி, மக்களை எச்சரித்துள்ளனர். சீருடை மற்றும் அடையாள அட்டையைக் காண்பிக்கும் பள்ளிகள், மாணவர்களின் ஈடுபாட்டை மறுத்துள்ளது. பிச்சை எடுக்கும் மாணவர்கள் தங்களது பள்ளியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.கோரமங்களா, மடிவாளா, எம்.ஜி.ரோடு ஆகிய இடங்களில் உள்ள சிக்னல்களில் சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். அவர்கள் ஒற்றைப் பெற்றோர் இருப்பதாக, அல்லது தாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, பணத்தைத் கேட்கிறார்கள். இது தொடர்பாக தனியார் பள்ளியான நாசரேத்தின் நிர்வாகிகள் கூறுகையில், 2019-ம் ஆண்டு இந்த பிரச்சனை தொடர்பாக போலீசில் புகார் அளித்தோம். “நாங்களும் சில மாணவர்களை சாலையில் பார்த்திருக்கிறோம். விசாரித்தபோது, அவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இங்கு படிப்பதாகவும் வார இறுதி நாட்களில் பிச்சை எடுப்பதாகவும் கூறினர். அந்த சிறுவர்கள் எங்களிடம் படிக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் சூர்யாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றனர்.
சூர்யாநகர் போலீசார் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சில குழந்தைகள் கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் அடையாள அட்டைகளை தவறாகப் பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக பள்ளி புகார் அளித்தது. சில வாகன ஓட்டிகள் இதுபோன்ற குழந்தைகளின் புகைப்படங்களை கிளிக் செய்து சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய பின்னர் இந்த சம்பவம் முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த புகைப்படங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்றனர். “சில குழந்தைகளை நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு போலீஸ் குழு பள்ளிக்குச் சென்றது. ஆனால் பொதுமக்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் சிறுவர்கள் யாரும் பள்ளியில் படிக்கவில்லை. பின்னர் எங்களுக்கு பள்ளியிலிருந்து புகார் வந்தது. கோரமங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களுக்குச் குழு சென்றது. இருப்பினும், போலீஸ் குழு, மாணவர்கள் பணம் வசூலிப்பதைக் காண முடியவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் நம்பகத்தன்மை குறித்து பள்ளிக்கு அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. உண்மையில், அது சமூக ஊடகங்களில் ஒரு தெளிவுபடுத்தல் குறிப்பைக் கூட வெளியிட்டது:
“பள்ளிக் கட்டணம் செலுத்தும் சாக்கில் சில மோசடி செய்பவர்கள் எங்கள் பள்ளியின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். அவர்கள் தவறாக பள்ளிகளின் பெயரை பயன்படுத்துகிறார்கள். அடையாள அட்டைகள், முத்திரைகள், பிளக்ஸ் அட்டைகள் மற்றும் பிற ஏமாற்றும் முறைகளை கையாளுக்கின்றனர்.
அவை வணிக வளாகங்கள், சிக்னல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு அருகில் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன. எனவே பொதுமக்கள் அது போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.