போக்குவரத்து நெரிசலால் திணறும் பெங்களூர் சாலைகள்

பெங்களூர் : ஏப்ரல் 22 – நகர போக்குவரத்து போலீசார் சேகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகரில் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் நடந்த 883 உயிக்கொல்லி விபத்துக்களில் 32 சதவிகிதத்திற்கும் அதிகமானவை வார இறுதி நாட்களில் நடந்தவை. வாரத்தின் மற்ற வாகன நெரிசல்கள் மிக்க நாட்களை விட வார இறுதி நாட்களில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2022ம் ஆண்டின் ஞாயிறுக்கிழமைகளில் ஏற்பட்ட 115 விபத்துக்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 152 என உயர்ந்துள்ளது . இதே போல் சனிக்கிழமை நடந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் 103 இலிருந்து 133ஆக உயர்ந்துள்ளது. வாரத்தின் மற்ற நாட்களில் கடந்த ஆண்டு சராசரியாக 120 உயிக்கொல்லி விபத்துக்கள் நடந்துள்ளன. அப்படியெனில் நாளொன்றுக்கு 2.3 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வார இறுதி நாட்கள்தான் வாகன ஓட்டிகளுக்கு கொடூரமான நாட்களாக உள்ளன. இது குறித்து போக்குவரத்து போலீசார் அமைத்த குழுவின் ஒரு உறுப்பினரான நிம்மன்ஸ் மருத்துவமனை பேராசிரியர் கௌதம் கூறுகையில் வார நாட்களைவிட சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை செலுத்துவதே இதற்க்கு முக்கிய காரணமாகும்.பெங்களூர் சாலைகளில் வாகனங்களின் வேகம் சராசரியாக மணிக்கு 18 கி மீ ஆகும். வார இறுதிநாட்களில் பெரும்பாலானோர் கேளிக்கை விஷயமாக வெளியே வருவதால் குறைந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டுகின்றனர். சாலைகளில் வாகனங்கள் குறைவு என்றாலே வாகனங்களின் வேகம் அதிகரித்து விடுவது சகஜம். மக்கள் மிக வேகத்தில் வானங்களை ஓட்டுகின்றனர் என்பது இதன் பொருளாகும். இதுமட்டுமின்றி மது அருந்தி வாகனம் ஓட்டுவது , போதை பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுவது மற்றும் முரட்டுத்தனமாக ஓட்டுவது ஆகியவை விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாகும் . தவிர இத்தகைய விபத்துக்கள் கனகபுரா வீதி , பெல்லாரி வீதி ஆகிய நகருக்கு புறம்பாக கொண்டு சேர்க்கும் சாலைகளில் உள்ள ஊரக பகுதிகளில் அதிகம் ஏற்படுகின்றன. தவிர நெடுஞசாலிகளில் இருக்கை பெல்ட்டை அகற்றிவிடுவது மற்றும் நகர பகுதியை கடந்த உடனே ஹெல்மெட்டை நீக்கி விடுவதும் உயிக்கொல்லி விபத்துக்களுக்கு காரணிகளாகும். இத்தகைய உயிரை குடிக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் பிற்பகல் 9 முதல் மாலை 6 மணிக்குள் நடக்கிறது. 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு இந்த நேரத்தில் நடந்த உயிர் குடிக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை 48 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் சாலைகளில் வாகனங்கள் குறைவு என்பதால் வாகன உயிர் பற்றியும் கவலை இன்றி ஓட்டிகள் மிக வேகமாக வாகனங்களை ஓட்டுகின்றனர்..இவ்வாறு கௌதம் கூறினார்