போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனி வாரியம் : முதல்வர்

பெங்களூர் : செப்டம்பர். 8 – நகரின் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க தனி வாரியத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து நடைமுறை படுத்தப்படும். மத்திய நில தொடர்பு மற்றும் நெடுஞசாலைகளின் அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கு கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் தேசிய நெடுஞசாலை துறை , பெங்களூரு மாநகராட்சி , பெங்களூரு அபிவிருத்தி குழுமம், பி எம் ஆர் டி ஏ , மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இது குறித்து மாஸ்டர் திட்டம் வகுத்தால் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த அனைத்து துறைகளுடன் ஒன்றுகூடி ரயில்வே , மெட்ரோஆகியவற்றை உட்கொள்ளும் வகையில் பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் வாகன நெரிசல்களை தவிர்க்கும் வகையில் தனி வாரியம் அமைக்கப்படும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் மொத்த நாட்டின் வாகன போக்குவரத்து குறித்து ‘மந்தனா ‘ மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த வேளையில் பெங்களூரின் சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து மத்திய அமைச்சகருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதுடன் இதற்க்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் உதவி கேட்கப்பட்டுள்ளது . தேசிய நெடுஞசாலைகள் பெங்களூருக்கு உள்ளேயும் புறப்பகுதிகளிலும் செல்கின்றன. போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். தவிர மேலும் பல விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தவிர மூன்று கட்ட போக்குவரத்து தொழில் நுட்பத்தை நடைமுறை படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.