போக்குவரத்து விதிகளை மீறிய நபருக்கு ரூ.3.04 லட்சம் அபராதம்

பெங்களூரு, பிப். 12: ஹெல்மெட் அணியாமல், போனில் பேசுவது, சிக்னல்களைத் தாண்டுவது உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து
விதிகளை மீறிய நபருக்கு ரூ.3.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சுதாமாநகரில் வசிக்கும் ஒருவர் ஹெல்மெட் அணியாமல், போனில் பேசுவது, சிக்னல்களைத் தாண்டுவது உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.3.04 லட்சம் அபராதம் நிலுவையில் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
விதிமீறல் செய்தவரின் வீட்டிற்கு சமீபத்தில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சென்று அபராதம் செலுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.
நிலுவைத் தொகையைச் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும், KA05 KF 7969 என்ற பதிவு எண் கொண்ட தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பறிமுதல் செய்யுமாறும் அவர்களிடம் அந்த நபர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த போலீசார், நிலுவைத் தொகையை கட்டத் தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய நபர், வாகனத்தில் செல்லும்போது மொபைல் போனில் பேசியது, சிக்னல்களைத் தாண்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு இடையே நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் கோரியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.