போதைப்பொருள் விசாரணைக்கு ஒத்துழைப்பு : சித்தாந்த் கபூர் அறிவிப்பு

பெங்களூர்: ஜூன். 14 – போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் என்னை கைது செய்து நடத்திய விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன். போதைப்பொருள்களுக்கு எதிராக நகர போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியது என போதைப்பொருள் உட்கொண்ட விவகாரமாக கைது செய்யப்பட்ட பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷக்திகபூர் மகன் மற்றும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரன் சித்தாந்த் கபூர் தெரிவித்துள்ளான். போதை பொருள் உட்கொண்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி பின்னர் அல்சூர்போலீசாரின் விசாரணைக்கு உட்பட்டு போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்து நிருபர்களிடம் சித்தாந்த் பேசுகையில் போதைப்பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் உயிர்களை காப்பாற்றும் போலீசாரின் பணி இனியும் தொடரட்டும். நான் அனைத்து விதத்திலும் போலிஸாருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். இனியும் விசாரணைக்கு அழைத்தாலும் வருவதற்கு நான் தயார் என சித்தாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளான்.