போதைப் பொருள் கடத்திய ஆசாமி கைது

பெங்களூர்: நவம்பர். 20 – அட்டை பெட்டிகளுக்குள் ஓளித்து வைத்து ஹீராயினை கடத்திய பயணி ஒருவனை கைது செய்துள்ள கேம்பெகௌடா சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவனிடமிருந்து 1926 கிராம் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர். ஆடிஸ் அபாபாவிலிருந்து நேற்று விமானநிலையத்திற்கு வந்திருந்த பயணி ஒருவன் போதை பொருள் கடத்திவருவதாக கிடைத்த நம்பகமான தகவலின்பேரில் சுங்க அதிகாரிகள் பயணியரை சோதனைகளுக்கு உட்படுத்தினர். இந்த சோதனையில் குற்றவாளி 1926 கிராம் அளவிலான போதை பொருளை கொண்டு வந்திருப்பது தெரியவந்து .அவனை கைது செய்து தேசிய போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதுடன் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர்.