
பெங்களூரு, ஆக.7- குடிபோதையில் வாலிபர்கள் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தந்தையும், மகனும் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த கொடூர சம்பவம் சதாசிவநகர் ராமையா மருத்துவமனை எதிரில் உள்ள இஸ்ரோ வட்டத்தில் நேற்று நள்ளிரவு நடந்தது.
குவேம்பு நகரைச் சேர்ந்த ரகு (65), இவரது மகன் சிரஞ்சீவி (25). ஆகியோர் பலியானார்கள்.
காயமடைந்த வாசு, ராமையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கோரமங்களாவில் புத்தகக் கடை நடத்தி வந்த தந்தையும் மகனும் கடையை மூடிவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. குடி போதையில் காரை ஓட்டி வந்தவர்கள் பின்பக்கமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதினர். தறிக்கட்டு வந்த கார் முதலில் ஆட்டோ மீது மோதியது. பின்னர் அந்தப் பக்கமாக நடந்து வந்த வாசு என்பவர் மீது மோதியது. அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பைக் கவிழ்ந்து தந்தையும், மகனும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மது அருந்திவிட்டு காரில் வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மற்றவர்கள் தப்பி சென்று உள்ளனர் அவர்களை தேடி வருகின்றனர்.