போதையில் 4வதுமனைவியைக் கொன்ற கணவர் கைது

பெங்களூரு, நவ.22- குடிபோதையில் கணவன் மனைவியை கட்டையால் தாக்கிய சம்பவம் ராம்நகர் மாவட்டம் அவேரஹள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.கிராமத்தில் உள்ள மா தோட்டத்தில் வேலை செய்து வந்த போரையா, இரவு குடிபோதையில் தகராறு செய்து மனைவி பத்ரம்மாவை தாக்கி கொன்றார். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இறந்த பத்ரம்மா போரையாவின் நான்காவது மனைவி.
இதற்கு முன் போரயா 2014ல் தனது இரண்டாவது மனைவியையும் தாக்கி கொலை செய்துள்ளார். 6 ஆண்டுகள் தண்டனை முடிந்து வெளியே வந்து பத்ரம்மாவை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் இரண்டாவது மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் நடந்தது. தற்போது ராம்நகர் ஊரக போலீஸார், மனைவியைக் கொன்ற குற்றவாளியை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்