போதை பார்ட்டி: பெங்களூரில் பாலிவுட் நடிகர் மகன் கைது

பெங்களூர்: ஜூன் 13 – நகரில் மீண்டும் நள்ளிரவு வரை போதை பொருள்களை உட்கொள்ளும் பார்ட்டிகள் தலைதூக்கியுள்ளன. கொரோனாவால் பல மாதங்களாக நடந்திராத போதை பார்ட்டிகள் தற்போது மீண்டும் ஆங்காங்கு நடக்க துவங்கியுள்ளது . அல்சூரின் ஜி டி மால் அருகில் பார்க் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவுக்கும் மேல் பார்ட்டி நடந்துகொண்டிருக்கையில் போலீசார் சோதனை செய்ததில் ஒரு பெரிய திமிங்கிலமே வலையில் சிக்கியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷக்திகபூரின் மகன் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரனுமான சித்தாந்த் கபூர் இந்த பார்ட்டியில் போதை பொருளை உட்கொண்டிருந்தபோது அவரை பிடித்து மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவ சோதனையில் சித்தாந்த் கபூர் போதை பொருள் உட்கொண்டிருப்பது உறுதியானதால் அவரை அல்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கைது செய்து விசாரணை நடந்து வருகிறது என கிழக்கு பிரிவு டி சி பி டாக்டர் பீமாஷங்கர் குலேத் தெரிவித்துள்ளார். ஜி டி மால் அருகில் உள்ள பார்க் ஓட்டலில் நள்ளிரவு வரை பார்ட்டி நடந்து வருவது குறித்து கிடைத்த நம்பகமான தகவலை வைத்து இரவு 12 மணியளவில் அல்சூர் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையில் 25க்கும் அதிகமான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பார்ட்டியில் மது , மற்றும் போதை பொருளகள் ஆகியவற்றுடன் 50க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருளை உட்கொண்டு மனம் போன போக்கில் நடனமாடிக்கொண்டிருந்தனர் . அவர்கள் அனைவரையும் வசத்தில் எடுத்த போலீசார் ஐம்பது போரையும் மூன்று டி டி வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சித்தாந்த் கபூர் போதை பொருள் உட்கொண்ண்டிருப்பது உறுதியானது என டி சி பி பீமாஷங்கர் குலேத் தெரிவித்தார்.