போதை பொருட்கள் பறிமுதல் – வெளிநாட்டு பிரஜை கைது

பெங்களூர் டிசம்பர் 12
பெங்களூரில் 2024 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். 15 கிலோ போதைப் பொருட்கள்
எம்.டி.எம்.ஏ கிரிஸ்டல், 500 கிராம் கொக்கைன், 1 மொபைல் போன் உள்ளிட்ட 21 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர் பெங்களூரு சிசிபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு ராமமூர்த்திநகர் காவல் நிலையப் பகுதியில் நடத்திய சோதனையில் இவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டு உள்ள வெளிநாட்டு பிரஜை பெங்களூர் ராமமூர்த்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போதை பொருட்களுக்கு அதிக கிராக்கி இருப்பதை உணர்ந்து இதை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்தார். இந்த நிலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இவர்களை பறிமுதல் செய்து உள்ளனர் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் மட்டுமல்லாமல் தமிழ்நாடு டெல்லி மும்பை உள்ளிட்ட பல போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது குறித்து கிடைத்த தகவல் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது