போராட்டத்திற்கு 6 பசுக்களை கொண்டு வந்த 9 பேர் கைது

பெங்களூர் : பிப்ரவரி. 11 – மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த 6 பசுக்களை சுதந்திர பூங்காவிற்கு கொண்டு வந்த 9 பி ஜே பி பிரமுகர்களுக்கு எதிராக விலங்குகள் கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கியுள்ள பணத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என வற்புறுத்தி பி ஜே பி தலைவர்கள் முதல்வர் சித்தராமையா அரசுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 6 அன்று சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தங்களுடன் பசுக்கையும் கொண்டு வந்திருந்தனர். இவர்களை கைது செய்து போலீசார் பி எம் டி சி பேருந்துகளில் ஏற்ற முயன்றனர். அப்போது சில போராளிகள் தாங்கள் அழைத்து வந்த பசுக்களையும் பேரூந்தில் ஏற்ற முயற்சித்தனர். ஆனால் பேரூந்தில் போதிய ஐடா வசதி இல்லதாதால் பசுக்களை ஏற்ற முடிய வில்லை. இதனால் பசுக்களை காப்பாற்ற பெரும் அவஸ்தையானது. தவிர போராட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த அதிக ஒலியுடன் கூடிய பெரிய ஒலிபெருக்கிகள் சத்தத்தால் பசுக்கள் திணறி திசைக்கொன்றாக அலறி ஓடி உள்ளன. இந்த நிலையில் பசுக்களை துன்புறுத்தியது தொடர்பாக உப்பர்பெட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பி ராஜீவ் , பாட்டில் நடஹள்ளி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.போராட்டம் நடத்த மட்டுமே சுதந்திர பூங்காவில் அனுமதி அளித்திருந்த நிலையிலிவர்கள் மிருகங்களை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.