போராட்டத்தை தீவிரப்படுத்தும் இளைஞர் காங்கிரஸ்

கன்னூர்: ஜூன். 14 கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ,இதில் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார் ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு காரணமாக பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பினராயி விஜயன், தனது சொந்த ஊரான கண்ணூரிலிருந்து நேற்று திருவனந்தபுரத்துத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்தார். இதற்காக கார் மூலம் அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஒரு தெருவுக்குள் இருந்து ஓடி வந்த இளைஞர் காங்கிரசார் பினராயி விஜயனுக்கு கருப்புக் கொடி காட்டி கோஷமிட்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.