போராட்டம் எதிரொலி: போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூர், நவ. 27-
கர்நாடக மாநிலம் போராட்டக் குழு இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் நகரில் சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோடேஸ் சந்திப்பில் இருந்து மகாராணி சந்திப்பு, ராமச்சந்திரா சாலை, காளிதாசா சாலை, அரண்மனை சாலை, கே.ஜி. சாலை, வரையிலான சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைசூர் பேங்க் சர்க்கிலில் இருந்து சுதந்திரப் பூங்கா நோக்கி வரும் வாகனங்கள், மகாராணி கல்லூரி அருகே உள்ள அரண்மனை சுரங்கப்பாதை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.சுதந்திரப் பூங்காவுக்கும் கனகதாசா வட்டத்துக்கும் இடையிலான வீதியை போலீசார் மூட உள்ளதாக அவ்வழியின் வீதியில் பயன்படுத்துவோரை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோடேஸ் சர்க்கிளில் இருந்து கே.ஆர். சர்க்கிள் வரை நோக்கி வரும் வாகனங்கள் ஆனந்தராவ் மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தி சாளுக்கியா சர்க்கிள் நோக்கிச் செல்லலாம்.சுப்பண்ணா சந்திப்பிலிருந்து காந்திநகர் எம்.டி.ஆர். சந்திப்பு செல்லும் சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சேஷாத்திரி சாலையிலிருந்து வாகனங்கள் சுப்பண்ணா சர்க்கிளின் இடது புறம் திரும்பிச் செல்லலாம். மவுரியா சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களுக்கு சுப்பண்ணா சர்க்கிலில் வலது புறம் திருப்பி செல்ல வழி இல்லை.ஆனால், காந்தி நகர் 5வது மெயின் ரோட்டை நோக்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.