போருக்கு தயாராக இருங்கள்: வடகொரிய அதிபர் அழைப்பு

சியோல்: பிப்.3 அமெரிக்கா, தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றது. அந்நாட்டின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டபோதும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா வழக்கமாக கொண்டுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன், நம்போ நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கடற்படை திட்டங்களை ஆய்வு செய்தார்.
அப்போது கடற்படையை வலுப்படுத்தும்படி அதிபர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. போருக்கு தயாராக இருங்கலள் என்று அதிபர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடற்படையை வலுப்படுத்துவது, நாட்டின் கடல்சார் இறையாண்மையை நம்பக தன்மையுடன் பாதுகாப்பதிலும், போர் ஆயத்தை முடுக்கிவிடுவதிலும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை தொடர்ந்து வடகொரியா கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்தது.