போர்வெல் தோண்டும் கட்டணம் 40 சதவிகிதம் உயர்வு

பெங்களூர் மார்ச் 26-
பெங்களூரில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினை தீர்க்க போர்வர்கள் தோண்டுவதற்கு, போர்வெல்கள் தோண்டும் ஏஜென்சிகள் திடீரென அதன் விலையை உயர்த்தி, பொது மக்களிடம் அதிக பணம் பறிக்கும் பணிகள் நடந்து வருகிறது. போர்வெல் தோண்டுவதற்கு முப்பது முதல் நாற்பது சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெங்களூருக்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் காவிரியில் இருந்து தினமும் 1,450 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
ஆயினும் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை, தாகத்தை தணிக்கவில்லை.
ஜல மண்டலி, பெங்களூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 16 ஆயிரம் போர்வெல்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் போர்வெல்கள் வறண்டு விட்டன. எனவே பொதுமக்கள் சொந்த உபயோகத்துக்கு தோண்டப்பட்ட நான்கு லட்சம் போர்வெல்களில் பெரும்பாலானவை தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது.
இதனால் தண்ணீர் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. பெங்களூர் மத்திய பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜலம் மண்டலி, பெங்களூர் மாநகராட்சி புதியதாக போர்வெல்களை தோண்டப்படுகிறது.
ஆயினும், போர்வெல்கள் தோண்டுவதற்கு கிராக்கி அதிகரித்துள்ளது .கடும் வறட்சியில் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக போர்வெல்களை தோண்டப்படுகின்றன. இதன் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இதனை சாதகமாக பயன்படுத்தி, போர்வெல் எந்திர உரிமையாளர்கள் அதிக பணத்தை பெறுகிறார்கள்.
போர்வெல்கள் தோண்ட முன்பு 250 அடிவரை அடிக்கு 75 ரூபாய் கட்டணம் இருந்தது. தற்போது அது 110 ரூபாயாக உயர்த்தி உள்ளனர் .250 அடிக்கு பிறகு, 100 அடிக்குள் ஒவ்வொரு அடிக்கும் தலா 25 முதல் 30 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.தனியார் போர்வெல்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் டேங்கர்களுக்கு கட்டணம் நிர்ணயித்த குடிநீர் வழங்கல் வாரியம், மாநகராட்சி, புதியதாக போர்வல் தோண்டும் எந்திரங்களுக்கு கட்டணம் நிர்ணிக்கவில்லை.அறவே போர்வெல் தோண்டுபவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, விலைகளை உயர்த்திக்கொண்டு பணத்தை பறிக்கின்றனர்.
இதனால் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.போர்வல் தோண்ட முன்பதிவு செய்ய வேண்டும். போர்வெல் தோண்டுவதற்கு முன் பதிவு செய்தாலும் 15 நாள் முதல் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.ரீ போர் தோண்ட யாரும் முன் வருவதில்லை. காரணம் இதில் அதிக லாபம் கிடைப்பதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.பெங்களூரில் ஒரு சாலையில், மூன்று போர்வல்கள் அமைக்கப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் வற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.எனவே போர்வெல்கள் பெற ஜலம்மண்டலி மாநகராட்சி குடிநீர் வாரியம், அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் மானியத்தில் குடிநீர் தேவைக்காக போர்வல்கள் தோண்ட துவங்கியுள்ளனர்.