போலி ஆவணங்கள் தயாரித்த டாக்டர் கைது

பெங்களுர் : நவம்பர். 29 –
குழந்தைகளை விற்க போலி ஆவணங்கள் தயாரித்த டாக்டர் கைது செய்யப்பட்டார்
தமிழ் நாட்டிலிருந்து வந்து நகரில் பச்சிளம் குழந்தைகளை விற்று வந்த கும்பல் தொடர்பாக மேலும் இரண்டு பேரை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலில் தரகராக இருந்த பெண் ரமா என்பவரை ஹெப்பாலில் கைது செய்துள்ளனர். இவருடன் ராஜாஜிநகரில் போலி மருத்துவன் ஒருவனை கைது செய்து இவர்களிடம் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகளை விற்று வந்த ரமாவின் உறவினர் ஒருவள் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் தரித்துள்ளாள் . பின்னர் கருக்கலைப்புக்கு அலைந்து கொண்டிருந்த அவளை ரமா பராமரித்து வந்துள்ளாள் . அவளை ஒன்பது மாதம் பேணி காத்து குழந்தையை வாங்கிகொண்டாள் . பின்னர் தன்னுடைய கோஷ்டியுடன் சேர்ந்து குழந்தையை விற்றுள்ளாள் குழந்தையை பெற்று கொடுத்ததற்கு அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்துள்ளாள் . கர்நாடகம் தமிழ்நாட்டில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த இந்த கும்பலிடம் சிசிபி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் குழந்தை விற்பனை தொழிலில் அதிக பணம் கிடைப்பதை கருத்தில் கொண்டு பல இடங்களில் தங்கள் கழிவறைசையை காட்டி உள்ளனர். பல தம்பதிகளை மனமாற்றம் செய்து குழந்தை பெற்று கொடுத்தால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று முன்பதாகவே புக் செய்து பணம் கொடுத்து உள்ளனர் அதன்படி பிறக்கும் குழந்தைகளை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர் தற்போது இந்த கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.