போலி கைக்கடிகாரங்கள் விற்ற ஆசாமி கைது

பெங்களூர், செப். 15- ரேடோ , ரோலக்ஸ் , ஹ்யூப்ளூட் , போலீஸ் , டீசெல் , மற்றும் வேறு அதிக விலை மதிப்புள்ள போலி கைக்கடியாரங்களை
விற்பனை செய்ய முயற்சித்த ஒருவனை சி சி பி போலீசார் கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். சிவாஜிநகரை சேர்ந்த சையத் அஹமத் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி இவனிடமிருந்து அதிக மதிப்புள்ள 83 போலி கைக்கடியாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என இணை போலீஸ் ஆணையர் ரமன் குப்தா தெரிவித்தார். கைப்பற்றப்பட்டுள்ள போலி கைக்கடியாரங்களின் அசல் மதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 75 ஆயிரம் என்பதுடன் குற்றவாளிக்கு எதிராக சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி மும்பையிலிருந்து கிமாராம் புரோஹித் , ஜெகதீஷ் மற்றும் ஷபீக்கான் ஆகியோர் வாயிலாக அதிக மதிப்புள்ள போலி கைக்கடியாரங்களை தருவித்து சிவாஜிநகரின் ஹெச் கே பி வீதி அருகில் விற்க முயற்சித்த போது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்
அவனை கைது செய்துள்ளதாக இணை ஆணையர் ரமன் குப்தா தெரிவித்தார்.