போலி பாஸ்போர்ட் – நேபாள நபர் பெங்களூரில் கைது

பெங்களூரு, செப்.21- கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல இருந்த நேபாள நாட்டை சேர்ந்த நபரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பெயர்
உத்தம் ஹமால். இவர் பெங்களூரில் இருந்து பாங்காக் நகருக்கு இரண்டு பெண்களுடன் பயணம் செய்ய வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி போலி பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார். இதன் மூலம் பாங்காக் செல்ல முயன்றார். எனினும், சந்தேகம் எழுந்ததையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இவர் தன்னுடன் இரண்டு பெண்களை அழைத்து செல்ல வந்துள்ளார்.
இண்டிகோ விமானம் இவர்கள் பாங்காங் செல்ல வந்தனர் இந்த நேபாள நாட்டு நபர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை தன்னுடன் அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த இரண்டு பெண்களின் பாஸ்போர்ட் விவரம் சரியாக இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது