போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் கைது

மடிகேரி : செப்டெம்பர். 2 – சட்டவிரோதமாக போலி மது பாணம் தயாரித்த கேரளாவை சேர்ந்த குற்றவாளியை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர் . தாவூரு என்ற கிராமத்தை சேர்ந்த ஹாசீம் (47) என்பவன் கைது செய்யப்டுள்ள குற்றவாளியாவான். இவன் சட்டவிரோதமாக மது பாணம் தயாரித்து அவற்றை இந்தியாவில் தயாரித்த வெளி நாட்டு மது பானங்களின் பெயர்களில் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . குடகு மற்றும் கேரளா பகுதிகளில் இந்த போலி மது பாணங்களை இவன் விற்று வந்திருப்பதுடன் குற்றவாளி குறித்து நம்பகமான தகவலை வைத்து பாகமண்டலா போலீசார் பாகமண்டலா பகுதியில் உள்ள தாவூரு கிராமத்தை சேர்ந்த ஹாசீம் வீட்டில் சோதனைகள் நடத்தி போலி மது பாணங்கள் தயாரிக்க பயன்படுத்திய 60 கிலோ 200 கிராம் எடையுள்ள காஸ்டிக் கார்மேல் மற்றும் 2 ஆயிரம் காலி பாட்டில்கள் , லேபிள் , மூடிகள் , ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். . காஸர்கோடுவை சேர்ந்த ஹாசீம் சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு இங்கேயே வசித்து வந்துள்ளான். ஹாசீம் மனித உயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்படியும் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தி போலி மது தயாரித்துவந்த நிலையில் மடிகேரி சி பி ஐ அனூப் மாதப்பா மற்றும் பாகமண்டலா எஸ் பி ஷோபா ஆகியோர் தலைமையில் சோதனைகள் மேற்கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் .