போலீசாரின் இரவு பயணத்திற்கு தடை

பெங்களூர்: செப்டம்பர். 8 – காஞ்சா கும்பலை கைது செய்ய சென்றுகொண்டிருந்தபோது ஆந்திர மாநிலத்தின் சித்தூர் அருகில்கார் விபத்து ஏற்பட்டு சப் இன்ஸ்பெக்டர் , மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் இறந்ததை தீவிரமாக கருத்தியுள்ள போலீஸ் இலாகா தங்கள் ஊழியரின் இரவு பயணங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பாதுகாப்பு , தேர்தல் பணிகள் , மற்றும் குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக மற்றும் இதர பணிகளுக்காக நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரில் மற்றும் ஊழியர்கள் எவ்வித வாகனங்களிலும் கடமை ஆற்றவோ அல்லது கடமையிலிருந்து விலகிய பின்னரோ பாதுகாப்பு கருதி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணிவரை பயணம் மேற்கொள்ளக்கூடாது என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி ஐ டி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மட்டும் ஊழியர்களுக்கு மட்டும் நடைமுறையாகும் படி சி ஐ டி டி ஜி பி உத்தரவு பிறப்பித்துள்ளார். சி ஐ டி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் , சி எ ஆர் , டி ஏ ஆர் , கே எஸ் ஆர் பி , மற்றும் இதர பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இரவு பயணங்களின் போது விபத்துக்குள்ளாகி இறந்து போன உதாரணங்கள் உள்ளன. தேசிய குற்றங்கள் பதிவு வாரியம் (என் சி ஆர் பி ) அறிக்கையின் படி நாட்டில் 2021ல் பல்வேறு பிரிவை சேர்ந்த 427 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இறந்து போயுள்ளனர். இதில் 339 பேர் சாலை விபத்துக்களிலேயே இறந்துள்ளனர். தவிர நாட்டில் மொத்தம் பணியாரம் போது 1632 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துக்களில் 372 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காயங்களடைந்துள்ளனர் .