போலீசாரின் வலைதள பதிவு வைரல்

புதுடெல்லி: ஜனவரி. 10 -பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவு சென்றார். அந்த அழகிய தீவின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். அவரது பயணத்தால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.
இதனிடையே மிகவும் அழகான லட்சத்தீவுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள் என்ற கருத்துடன் டெல்லி போலீஸார் எக்ஸ் வலைதளத்தில் லட்சத்தீவு கடற்கரை படத்தைப் பதிவு செய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து டெல்லி போலீஸாரின் எக்ஸ் சமூக வலை தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நமது தீவு (லட்சத்தீவு) மிகவும் அழகானது மற்றும் நேர்த்தியானது. மன அழுத்தத்துடன் வாகனம் ஓட்ட வேண்டாம். சரியான தூக்கப் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். ஓய்வு எடுங்கள். அழகான லட்சத்தீவுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செல்லுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும், டெல்லி போலீஸாரின் கருத்துக்கு லைக் போட்டுள்ளனர். மேலும் சிலர் டெல்லி போலீஸாரின் கருத்து, புகைப்படத்துக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.