போலீசாரை ஏமாற்றி வந்த குற்றவாளி கைது

பெங்களூர் : நவம்பர் . 8 – போலீஸ் தகவலாளர் என கூறிக்கொண்டு போலீசாரையே ஏமாற்றி அவர்களின் பணத்திலேயே ஆடம்பர வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் ஒருவனை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர் . கடந்த நான்கு ஆண்டுகளாக போலீசாரிடம் மோசடி செய்து பப் , பார் ஆகியவற்றில் உல்லாசமாக பொழுதை கழித்துவந்த போலீஸ் தகவாளி வசீம் என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. வசீம் போலீசாருடன் இருந்துகொண்டே அவர்களுக்கு உதவி புரிவது போல் நடித்து அவர்களிடமிருந்தே பணத்தை பெற்று மோசடி செய்துள்ளான் . அங்கும் இங்கும் திரிந்து கொண்டு மது போதையில் உல்லாசமாக இருந்துள்ளான். அங்கொரு விவகாரம் நடந்துள்ளது . நான் அங்கு சென்று இட அடையாளம் அனுப்புகிறேன் . தவிர அங்கு என்னென்ன நடந்தது என்பது குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என போலீசாரிடம் குற்றவாளி வசீம் நம்பவைத்து வந்துள்ளான். போலீசார் உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாலும் அவர்களை தடுத்த வசீம் நான் அங்கு நேரில் சென்று இட அடையாளத்தை அனுப்புகிறேன் . என போலீசரை நம்பவைத்துள்ளான். சில நேரத்தில் சார் ஆட்டோ தொல்லை கொடுக்கிறது. பெட்ரோல் தேவை படுகிறது . மோட்டார் சைக்கிள் என்னிடம் இல்லை . வீட்டிலும் பிரச்சனை yena போலீசாரை நம்பவைத்து இரண்டு முந்தல் மூன்று ஆயிரம் வரை போலீசாரிடம் இருந்து போன் பே வாயிலாக பணத்தை பெற்று பணம் கிடைத்த சிலவே நிமிடங்களில் தன்னுடைய போனை ஸ்விச் ஆப் செய்து தப்பித்து வந்துள்ளான். இப்போது சி சி பி போலீசார் அவனை தேடி கண்டு பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.