போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்

கலபுரகி : ஜனவரி. 20 – போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் (பி எஸ் ஐ ) மோசடி நியமன விவகாரம் தொடர்பான முக்கிய குற்றவாளி ருத்ரேகௌடா சி ஐ டி அதிகாரிகளிடமிருந்து தப்பித்து கொண்டு தலைமறைவாகியுள்ளான். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சி ஐ டி அதிகாரிகள் குழு நேற்று நகரின் அக்கமகாதேவி காலனியில் உள்ள ருத்ரேகௌடா வீட்டுக்கு வந்த நிலையில் விசாரணைக்கு உட்பட்ட அதிகாரி ஒருவரை அவன் தள்ளி விட்டு தப்பியோடியுள்ளான். குற்றவாளி ருத்ரேகௌடாவுக்கு எதிராக துமகூரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் அவனை கைது செய்ய நகருக்கு வந்திருந்த நிலையில் அதிகாரிகளிடமிருந்து ருத்ரேகௌடா தப்பித்துக்கொண்டு தலைமறைவாயுள்ளான். இன்ஸ்பெக்டர் ஹரீஷுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் சி ஐ டி குழுவின் பி எஸ் ஐ ஆனந்த் தலைமையில் போலீசார் குற்றவாளி ருத்ரேகௌடா பாட்டிலை கைது செய்ய வந்திருந்தனர். அப்போது ருத்ரேகௌடா அதிகாரிகளை தள்ளி விட்டு தப்பியோடியுள்ளான். சி ஐ டி போலீசார் இது குறித்து நகரின் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நியமன மோசடி முக்கிய குற்றவாளி ருத்ரேகௌடா பாட்டில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் தலைமறைவாயிருந்தான். பின்னர் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட சி ஐ டி போலீசார் மகாராஷ்டிராவின் புனே நகரில் அவனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற பின்னர் அடிக்கடி குற்றவாளி விசாரணைக்கு வரவில்லை. பி எஸ் ஐ நியமன தேர்வுகளில் மோசடி செய்த தேர்வு எழுதியவர்களுக்கு தங்கள் சகாக்கள் வாயிலாக ப்ளூ டூத் கருவிகளை ருத்ரேகௌடா அளித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றமும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ருத்ரேகௌடா வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர்.
நேற்று இரவு சி ஐ டி போலீசார் அவனை கைது செய்ய வந்த போது அவன் வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளான்கர்நாடக மாநிலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது கர்நாடக மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது இந்த முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்தார். இந்த நிலையில் அவரை கைது செய்ய சென்றபோது போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடி தலைமறை ஆகிவிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. போலீசாரை மீறி அவர் தலை மறைவு ஆகியிருக்க முடியுமா இதற்கும் யாராவது உடந்தையாக இருந்தார்களா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது