போலீசாரை தாக்கிய கொலை குற்றவாளி சுட்டு பிடிப்பு

பெங்களூர்: நவம்பர். 25 – கொலை குற்றவாளியை இட மகஜருக்கு அழைத்துச்சென்ற போது போலீசாரை வீச்சரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சித்த கொலையாளியை மாதநாயக்கனஹள்ளி போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். போலீசாரின் குண்டடிபட்டு காலில் காயமடைந்துள்ள ரௌடி ராஜராஜன் என்ற சேது
அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவன் உயிராபதிலிருந்து தப்பியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள்தெரிவித்துள்ளன . ராஜராஜன் வீச்சரிவாளால் தாக்கியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஹாஜா நாம்தார் தன்னுடைய இடது கையில் காயமடைந்திருப்பதுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாசனபுரா ஊராட்சி மாசோஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் கடந்த நவம்பர் 15 அன்று நடந்த ரௌடி பட்டியலில் இருந்த நடராஜ் என்ற முள்ளு என்பவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜராஜன் என்ற முள்ளு மற்றும் குமார் உட்பட இரண்டு பேரை இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர். இந்த கொலைக்கு பழைய பகையே காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜராஜனை மாதநாயக்கனஹள்ளி போலீசார் இன்று அதிகாலை இட மகஜருக்கு அழைத்து சென்ற நேரத்தில் கொலைக்கு பயன்படுத்திய வீச்சரிவாள் தேடி எடுத்த குற்றவாளி பின்னர் திடீரென அதே வீச்சரிவாளால் போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்தபோது போலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.