போலீசாரை தாக்கிய நபர்மீது துப்பாக்கி சூடு

சிவமொக்கா : நவம்பர். 5 – கைது செய்ய சென்ற போலீசாரை கத்தியால் தாக்கிய குற்றவாளியை கால்களில் துப்பாக்கியால் சுட்டு பின்னர் கைது செய்த்துள்ள சம்பவம் நகரில் நடந்துள்ளது. போலிஸாரின் தோட்டா இடது காலில் பட்டு காயமடைந்துள்ள அஸ்லம் என்பவன் தற்போது மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அவன் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளான்.புறலே வீதியில் உருவாகிவரும் லே அவுட் ஒன்றில் அஸ்லம் ஒளிந்து கொண்டிருந்தான். இவனை பற்றி கிடைதத நம்பகமான தகவல்களின் அடிப்படியில். தொட்டபேட்டே போலீசார் அவனை கைது செய்ய சென்றனர். போலீஸ் பி எஸ் ஐ வசந்த் தலைமையில் அஸ்லாமை கைது செய்ய முயன்றபோது அவன் போலீஸ் ஊழியர் ரமேஷ் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளான் . இந்த தாக்குதலால் ரமேஷ் காயமடைந்துள்ளார். பின்னர் அஸ்லம் தப்பிக்க முயன்றபோது அஸ்லாமை பி எஸ் ஐ வசந்த் எச்சரித்துள்ளார். ஆனாலும் போலீசாரை தாக்க அஸ்லம் முயன்றபோது தற்காப்புக்காக போலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.