போலீசாரை தாக்கிய ரவுடி சுலைமான் கைது

பெங்களூர் : நவம்பர். 15 – சண்டையை விலக்க சென்ற போலீஸ் கான்ஸ்டபிளைதாக்கி தப்பியோடியிருந்த ரௌடி சுலைமானை சாமராஜ்நகர் போலீசார் கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ரௌடி அப்துல் சுலைமான் என்பதுடன் இவன் சிக்கப்பட்டே போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் மஞ்சு என்பவரை தாக்கிவிட்டு தப்பியோடியிருந்தான் .
இவன் குறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் தற்போது அவனை கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 9 அன்று சிக்கப்பட்டே போக்குவரத்து போலீஸ் சரகத்தில் பி பி வீதியில் கேன்ஸ் கேபிள் ஊழியர் மஞ்சு பணியிலிருந்துள்ளார். அப்போது ஆட்டோவை பின்னே எடுக்கும் விஷயமாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளின் இருந்தவருக்கிடையே தகராறு நடந்துள்ளது. அப்போது இவர்களின் சண்டையை தவிர்க்க கான்ஸ்டபிள் மஞ்சு முயற்சித்துள்ளார். குற்றவாளிகளை ஒரு புறம் தள்ளி கலாட்டா செய்யதவாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது குற்றவாளி போலிஸாரை மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளான் . பின்னர் அன்று இரவே பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மஞ்சுவிடம் வந்த குற்றவாளி இவரை திட்டி தவடையில் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் மஞ்சு சாமராஜ்நகர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படியில் போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். குற்றவாளி அப்துல் சுலைமானுக்கு எதிராக விஜயநகர் , ஜெ ஜெ நகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.