போலீசார் என கூறி ஏமாற்றி ரூ. 32 லட்ச ரூபாய் மோசடி

பெங்களூர் : செப்டம்பர். 6 – தன் பெயரின் ஐந்து பாஸ்போர்டுகள் கண்டு பிடிப்பது தொடர்பாக விசாரணை நடக்க வேண்டியுள்ளது என தெரிவித்து தேவனஹள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் மஹாராஷ்டிரா மாநில குற்ற பிரிவு போலீசார் என்ற போர்வையில் அழைப்பு விடுத்து 32.25 லட்சங்கள் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தேவனஹள்ளியை சேர்ந்த ஷிகா சதுர ராவ் என்பவர் இந்த மோசடியில் பணத்தை இழந்தவர். இது குறித்து இவர் வடகிழக்கு பிரிவு சி ஈ ஏன் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2 அன்று பிடெக்ஸ் கொரியர் நிறுவன பெயரில் ஆசிரியர் சதுரராவ் என்பவருக்கு ஒருவர் போன்அழைப்பு விடுத்துள்ளார். அப்போது உங்கள் பெயருக்கு கொரியர் பார்சல் வந்திருப்பதாகவும் அதில் உங்கள் மொபைல் எண் , ஆதார் எண் , ஐந்து பாஸ்போர்ட்டுகள் , ஐந்து க்ரெடிட் கார்டுகள் மற்றும் ஒரு மடி கணினி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்த்தை மும்பை குற்றவியல் பொலிஸாருக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும் போன் செய்த நபர் பாஸ்போர்ட் விஷயமாக உங்களிடம் வீடியோ வாயிலாக பேச வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்கைப்பை பதிவிறக்கம் செய்யுமாறும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இது போலீஸ் அழிப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கையால் வீடியோ அழைப்பை ஏற்றுள்ளார். பின்னர் தன்னை மும்பை போதை பொருள் தடுப்பு ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் சிலர் உங்களின் பெயர்களில் உள்ள ஆவணங்களை தவறாக பயன்படுத்திவருவதாகவும் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளான். இந்த நிலையில் பல தவணை முறையில ஆசிரியர் 32. 25 லட்ச ரூபாய்களை மாற்றியுள்ளார். பின்னர் அந்த நபரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அதன் பின்னரே தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த ஆசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது சைபர் பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.