போலீஸ்காரரிடம் ரூ. 73 ஆயிரம் மோசடி

பெங்களூர் : பிப்ரவரி. 28 – நகரில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போலீஸ் இலாக்காவையும் விட்டு வைக்காமல் மோசடிகள் நடந்து வருகிறது . இந்த நிலையில் நகரின் சி ஏ ஆர் போலீஸ் பிரிவை சேர்ந்த பத்ரய்யாவின் வாங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக நம்ப வைத்து 73 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். கான்ஸ்டபிள் பத்ரய்யாவுக்கு போன் செய்த நபர்கள் உங்களின் எஸ் பி ஐ கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் பேன் கார்ட் முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். பின்னர் பத்ரய்யாவின் மொபைல் போனுக்கு லிங்க் அனுப்பியுள்ளனர். இந்த லிங்க்கை ஆன் செய்தவுடனேயே பத்ரயாவின் இறந்து கணக்குகளிலிருந்து பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் நல பிரிவிலிருந்து பேசுவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளது. அதிலும் பத்ரய்யா இரண்டு கணக்குகளுக்கு ஒரே எண்ணை தொடர்புக்கு வைத்திருந்ததால் இரண்டு கணக்கு பணமும் அபகரிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இரண்டு கணக்குகளில் இருந்த மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் பத்ரய்யா சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சைபர் குற்றவாளிகளிடமும் 200 அல்லது 300 சிம் கார்டுகள் உள்ளன. ஒரு முறை மோசடி வெற்றியடைந்த உடனேயே அந்த சிம் கார்ட் வீசி எறியப்பட்டுவிடுகிறது. இத்தகைய மோசடியாளர்களுக்கு சிம் கார்டுகள் ராஜஸ்தானின் பரத்பூரிலிருந்து ஒவ்வொருவருக்கும் கொரியர் வாயிலாக 100 அல்லது 200 சிம் கார்டுகள் வருகின்றன. என வாடா கிழக்கு பிரிவு டி சி பி அனூப் ஷெட்டி தெரிவித்தார்.