போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் முன்னாள் கவுன்சிலர் கைது

பெங்களூர் : ஜனவரி. 20 – பணியில் இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் (சி பி ஐ ) மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக முன்னாள் பி ஜே பி மாநகராட்சி உறுப்பினர் வி பாலகிருஷ்ணா என்பவரை கக்கலீபுரா போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு எண் 185 எலசேனஹள்ளி வார்டு முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணா நிலத்தகராறு விஷயமாக பேச நேற்று மாலை கக்கலீபுரா போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். இது விஷயமாக பேசிக்கொண்டிருந்த போது சண்டை நடந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரின் கழுத்தை பிடித்து பாலகிருஷ்ணா தாக்கியுள்ளார். உடனே பாலக்ரிஷ்ணாவை தங்கள் வசம் எடுத்த போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கக்கலீபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 353ன் கீழ் பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியது மற்றும் கடமை செய்ய தடுத்தது ஆகிய சட்ட நியமங்கள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டு பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழித்து சென்ற் ன்றிருப்பதுடன் இன்று குற்றவாளி பாலக்ரிஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். தவிர மேலும் பாலக்ரிஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் தங்கள் வசம் எடுக்க உள்ளனர்.