போலீஸ் ஊழியர் சாவு

பெங்களூர் : மார்ச். 7 – ஓய்வு பெற்ற போலீஸ் ஊழியர் முனி ஆஞ்சநேயா என்பவர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது. தொடடபல்லாபுராவின் மதுரா நகரின் ஹோசஹள்ளி பகுதியில் வசித்து வந்த முனி ஆஞ்சநேயா (65) நண்பர்களுடன் தர்மஸ்தலாவிற்கு சென்றுவருவதாக வீட்டில் தெரிவித்து சென்றுள்ள நிலையில் இன்று அதிகாலை மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். முனி ஆஞ்சநேயா நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று அதிகாலை மூன்று மணியளவில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் பஸ் நிலையத்தில் நண்பர்களுக்காக காத்திருந்த நேரத்தில் இவர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவருடைய சாவு குறித்து குடும்பத்தார் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். முனி ஆஞ்சநேயாவிடமிருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயுள்ளது.பின்னர் இவருடைய உடலை உடல்கூறு பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதுடன் இந்த விவகாரம் குறித்து உப்பர்பேட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.