போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை வெள்ளம்நனைந்த துப்பாக்கிகள்

பெங்களூர் நவம்பர் 9
பெங்களூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் உல்லால் ரிங் ரோடு பகுதியில் உள்ள பெங்களூர் மாநகர போலீசின் நகர ஆயுத ரிசர்வ் படை கட்டுப்பாட்டு அறையில் மழை வெள்ளம் புகுந்தது. இதில் அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கிகள் தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் நனைந்தது. மேலும் போலீஸ் ஆயுதப்படை ஆவணங்களும் மழை நீரில் நனைந்தது. கட்டுப்பாட்டு அறையில் சுவரில் ஒரு பக்கம் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் உள்ளே புகுந்ததாக தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் இதை பார்வையிட்டனர் பின்னர் மழையில் நனைந்து இருந்த துப்பாக்கிகளை வெளியே கொண்டு வந்து வெயிலில் காய வைத்தனர். மழையில் நனைந்து விட்டதால் துப்பாக்கிகள் வேலை செய்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. தோட்டாக்கள் போட்டு துப்பாக்கியை சுட்ட போது புஷ் என்று காற்று தான் வந்தது தோட்டம் எதுவும் வெளிய வரவில்லை. மழையில் நனைந்ததால் அவை வேலை செய்யவில்லை என்று தெரியவந்தது. இன்னும் கொஞ்ச நேரம் காய வைத்தால் அவை வழக்கமாக வேலை செய்யும் என்று அனைத்து துப்பாக்கிகளும் தரையில் வைத்து காய வைக்கப்பட்டது.