போலீஸ் நிலையத்தில் வழக்கு

மதுரை: மார்ச் 13: மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை தோப்பூரில் 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நிர்ணயித்த காலத்துக்குள் கட்டி முடிக்கவும், கட்டுமானப் பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கைவெளியிடும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.2026-ல் கட்டி முடிக்கப்படும்:
இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுவழக்கறிஞர் வாதிடும்போது,எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி முடிந்துள்ளது.